ஆசியா

தென்கொரியாவின் முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை!

  • December 30, 2024
  • 0 Comments

பதவிநீக்கம் செய்யப்பட்ட  அதிபர் யூன் சுக் யோலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு தென் கொரிய நீதிமன்றத்தை புலனாய்வாளர்கள் கோரியுள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரை விசாரிக்க விரும்புவதாக குற்றவியல் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. டிசம்பவர் 03 ஆம் திகதி சிலமணி நேரங்களே நீட்டித்த சர்ச்சைக்குரிய சட்டத்தை அமுற்படுத்தியதை தொடர்ந்து தென்கொரியாவல் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து யூன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். யூன் விசாரணைக்கு ஆஜராவதற்கான பல கோரிக்கைகளைத் […]

உலகம்

தெற்கு எத்தியோப்பியாவில் நடந்த சாலை விபத்தில் 70க்கு மேற்பட்டோர் மரணம்

  • December 30, 2024
  • 0 Comments

எத்தியோப்பியாவில் பயணிகள் நிறைந்த லொரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 71 பேர் உயிரிழந்ததாக சிடாமா வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போனா மாவட்டத்தில் அந்த விபத்து நடந்ததாக வட்டாரத் தொடர்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 30) பின்னேரம் தெரிவித்தது. விபத்தில் உயிர்பிழைத்தவர்களுக்கு போனா பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அது குறிப்பிட்டது. மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த லொரியில் பயணம் செய்தவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றதாக எத்தியோப்பியாவின் அரசாங்க ஒலிபரப்புக் கழகம் (EBC) கூறியது. எத்தியோப்பியாவில் வாகனம் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

தென்கொரியா விமான விபத்து : பண இழப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருமாறு கோரிக்கை!

  • December 30, 2024
  • 0 Comments

தென் கொரியாவின் கொடிய விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் தங்களால் இயன்றவரை தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்களை மீட்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதியான பார்க் ஹான் ஷின், மீட்புக்கு உதவ கூடுதல் நிபுணர்களை அனுப்புமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளார். தென் கொரிய விமான நிறுவனமான ஜெஜு ஏர், பெற்றோரை இழந்த குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு பண இழப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருமாறு பார்க் அழைப்பு விடுத்தார். “(Jeju Air) தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளது என்பதை இழந்த […]

ஆசியா

பாங்காக்கின் பிரபல சுற்றுலா தளத்தில் தீ விபத்து : மூவர் உயிரிழப்பு!

  • December 30, 2024
  • 0 Comments

பிரபல சுற்றுலாத் தலமான பாங்காக்கின் காவ் சான் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். ஆறு மாடிகளைக் கொண்ட எம்பர் ஹோட்டலின் 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறுதியில் தீ அணைக்கப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. […]

பொழுதுபோக்கு

பிசியாக சுற்று சிவா… பாலிவூட்டுக்கு பறந்த வெங்கட் பிரபு

  • December 30, 2024
  • 0 Comments

கோட் படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படம் இயக்குவதாக இருந்தார். ஆனால் சிவாவோ ஏ. ஆர் முருகதாஸ் படம், சுதா கொங்காராவின் புறநானூறு என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக இருப்பதால் வெங்கட் பிரபு ரூட்டை மாற்றிவிட்டார். பெரிய ஹீரோக்களுக்கு வலை வீசி வருகிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக அவர் அஜித் உடன் கூடிய விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் புக்கில் இவர் பெயர் இடம் பெற்று இருக்கிறது. இருவரும் தொலைபேசியில் […]

ஆசியா

சீனாவில் மண்வெட்டியால் சக மாணவரைக் கொன்ற பதின்ம வயதினர் இருவருக்கு சிறை தண்டனை

  • December 30, 2024
  • 0 Comments

சீனாவில் கடந்த மார்ச் மாதம் சக மாணவனைக் கொலை செய்த பதின்ம வயதினர் இருவருக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டு அரசாங்க ஊடகமான ‘சிசிடிவி’, டிசம்பர் 30ஆம் திகதி இதைத் தெரிவித்தது. தண்டிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் மண்வெட்டியால் சக மாணவரைக் கொன்றனர். இந்த வழக்கு, இளங்குற்றவாளிகளின் குற்றச்செயல்கள் குறித்துப் பொதுமக்களிடையே காரசாரமான விவாதத்தைத் தூண்டியது. சாங், லி எனும் குடும்பப் பெயர்களைக் கொண்ட இளையர்கள் இருவருக்கும் முறையே ஆயுள்தண்டனையும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்த […]

இலங்கை

இலங்கை : மாணவர்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவாதம்!

  • December 30, 2024
  • 0 Comments

இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாய் வங்கிகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் எதிர்மறையான முடிவுகளால் குழந்தைகளின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி செல்லும் குழந்தைகளில் 55 சதவீதம் பேர் கல்வியில் எதிர்மறையான விளைவுகளை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இந்த […]

ஆசியா

பொதுவாக பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை!

  • December 30, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கு தடை விதித்துள்ளது தலிபான் அரசு. அதன்படி புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. மேலும், தற்போது உள்ள ஜன்னல்களை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது அவர்களே சொல்லி இருந்தனர். பெண் கல்வி, பெண் […]

செய்தி

மக்களை வெளியேறும்படி உத்தரவிட்ட இஸ்ரேல்

  • December 30, 2024
  • 0 Comments

குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. காஸாவின் வடக்கில் முற்றுகையிடப்பட்ட பெட் ஹானொன் (Beit Hanoun) நகரத்தைச் சேர்ந்த எஞ்சியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின்போது பொதுமக்களுக்குக் காயம் ஏற்படாமல் இருப்பதற்கு அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்தது. அந்தப் பகுதியைப் பயன்படுத்தி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதாக அது குறிப்பிட்டது. இஸ்ரேலின் அண்மைய உத்தரவால் பல குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீன அதிகாரிகளும் ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிகளும் […]

செய்தி

இலங்கையில் ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிப்பு

  • December 30, 2024
  • 0 Comments

இலங்கையில் அடுத்த ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஓய்வூதியத்தை வரும் 10ம் திகதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான ஓய்வூதியம் எதிர்வரும் 9ஆம் திகதி வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் திகதி மட்டும் பணம் செலுத்தப்படும் என […]

error: Content is protected !!