இலங்கையில் தொழில் கிடைக்காதவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள்: ஜனாதிபதி உறுதி
அரசாங்கத்தின் எதிர்வரும் பொருளாதார வேலைத்திட்டம் முன்னர் தொழில் கிடைக்காதவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மன்னாரில் நேற்று (16) இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும் கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த நான்கு வருட காலமாக தொழில் உருவாக்கம் தடைபட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளின் ஊடாக இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் […]













