இலங்கையில் கோர விபத்து – யுவதி பரிதாபமாக பலி
கந்தளாய் – ரஜ எல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று காலை குறித்த பகுதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. அருகில் காணப்பட்ட யுவதி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கந்தளாய் – ரஜ எல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதியாவார். […]













