செய்தி

ரஷ்யாவின் முக்கிய பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்!

  • April 5, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் எல்லையோரமான ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போரில் அதன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாகத் தோன்றுவதாகவும் ,  ரஷ்ய மண்ணில் கெய்வின் படைகள் தங்கள் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள மொரோசோவ்ஸ்கி மாவட்டத்தில் மொத்தம் 44 ட்ரோன்கள் “தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக” ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் […]

பொழுதுபோக்கு

வாரிசு நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் லோகி? குண்டை போட்ட பயில்வான்

  • April 5, 2024
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் விருப்பமான இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கப் போகிறார். இப்படத்திற்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த சூழலில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் லோகேஷ் நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இயக்குனராக பட்டைய கிளப்பிய லோகேஷ் சமீபத்தில் இனிமல் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். கமலஹாசனின் […]

இலங்கை

வடக்கு நோக்கி நகரும் சூரியன் : இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு!

  • April 5, 2024
  • 0 Comments

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்வதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதன் அடிப்படையில் இன்று (05.3) மதியம் சுமார் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமகராம போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என்றும் தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

71 ஆண்டுகளின் பின் வானில் நிகழும் மாற்றம்! ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!

  • April 5, 2024
  • 0 Comments

பாரிய வால்மீன் ஒன்று வரும் திங்கட்கிழமை (08.04) அன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பிசாசு என்ற புனைப்பெயருடன் கூடிய குறித்த நட்சத்திரமானது 71 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியை கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணத்தின் போது இது தென்படும் என  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக வால்மீன் 12P/Pons-Brooks என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வால்மீனானது  கொம்புகளை கொண்டு காணப்படுவதால்   “டெவில் வால்மீன்” என்று அழைக்கப்படுகிறது. வால் நட்சத்திரங்கள் தூசி, உறைந்த வாயுக்கள், பனிக்கட்டி […]

வட அமெரிக்கா

600 பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்த ஆப்பிள் நிறுவனம்!

  • April 5, 2024
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் திட்டங்களை ரத்து செய்ததை அடுத்து, பணியாளர்களில் 600 பேரை அதிரடியாக நீக்கம் செய்து அதிர்ச்சி தந்துள்ளது. உலகின் தலைசிறந்த டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இது மொபைல் போன், வாட்ச் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட் என்ற முன்னொட்டு சேர்வதற்கு அர்த்தம் ஊட்டிய நிறுவனமாகும். இன்றுவரை அதன் ஐபோன், ஐமேக் தயாரிப்புகள் முன்னணி விற்பனையில் உள்ளன. பொறியியல் படிப்பை முடித்தவர்களில் கனவுகளில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுவதும் இருக்கும். அதற்கு […]

இலங்கை

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்!

  • April 5, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் ‘வலுவான எதிர்பார்ப்பு உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச […]

ஆசியா

ஈரானில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல்: வீ்ரர்கள் 10பேர் உட்பட 28 பேர் பலி

  • April 5, 2024
  • 0 Comments

ஈரானின் 2வது மிகப்பெரிய மாகாணமான சிஸ்டன்-பாலுசெஸ்தானில் உள்ள ராஸ்க், சர்பாஸ் மற்றும் சாஹ்பஹார் ஆகிய நகரங்களில் ராணுவ சோதனை சாவடிகள் மற்றும் கடலோர காவல் நிலையம் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஒரே சமயத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல்களால் பாதுகாப்பு படையினர் நிலைகுலைந்து போயினர். அவர்கள் சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்குள் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு […]

தமிழ்நாடு

மாயமான கணவர்…மகன்,மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்- மூவரும் பலியான சோகம்!

  • April 5, 2024
  • 0 Comments

மாயமான கணவரைத் தேடி கோவை வந்த இடத்தில் உடமைகளும் திருடு போனதால் விரக்தி அடைந்த தாய், மகன், மகள் என மூன்று பேரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(50). இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16) என்ற மகனும் ஜனனி (15) என்ற மகளும் உள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகமூர்த்தி திடீரென மாயமான நிலையில், இது தொடர்பாக […]

இலங்கை

இலங்கையில் புத்தாண்டு காலத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை!

  • April 5, 2024
  • 0 Comments

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்திற்கான விசேட பஸ் சேவை இன்று (05.04) முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச் செல்வதற்காக இந்தப் பேருந்துச் சேவை நடத்தப்படும் என்றும், அதற்காக சுமார் 200 கூடுதல் பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பில் இருந்து தீவின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பஸ் சேவை இடம்பெறவுள்ளது. இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் […]

பொழுதுபோக்கு

மகள் கல்யாணத்தில் கொள்ளை லாபம் பார்த்த ரோபோ சங்கர் குடும்பம்… எல்லாம் இதுக்குத்தானா?

  • April 5, 2024
  • 0 Comments

ரோபோ சங்கர் விஜய் டிவி மூலமா சினிமால முகம் தெரியும் அளவுக்கு பட வாய்ப்புகள் அடிக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் அதே விஜய் டிவி ரோபோ ஷங்கரின் மனைவிக்கும் வாய்ப்பு கொடுத்து இப்ப அவங்க நிறைய யூட்யூப் சேனல்ல நடிச்சிட்டு இருக்காங்க. பொண்ணு இந்திரஜா டிக் டாக்ல சாதாரணமாக நடிக்க ஆரம்பித்து இப்பொழுது படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு கட்டத்துல ரோபோ சங்கர் உடம்பு சரியில்லாமல் வீட்ல உட்கார வேண்டிய நிலைமை வந்துச்சு. அப்போ பிரியங்கா ரோபோ […]