இலங்கை

திருகோணமலை : வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் (23) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன. வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவைக்கப்படுகிறது. வயல் உரிமையாளர்களினால் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது குறித்த துப்பாக்கி ரவைகளை கண்டதாகவும் உடனடியாக மொரவெவ பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் வயல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை

திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் திட்டமிட்டப்படி இடம்பெறும் என அறிவிப்பு!

  • February 24, 2024
  • 0 Comments

திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என தெரியவருகின்றது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் இடம்பெறும் திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பக்தர்கள் அது தொடர்பில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதுதொடர்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் கடந்த வருடத்தைவிட இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நகர்வலம் […]

ஆஸ்திரேலியா

விக்டோரியா நீர்வீழ்ச்சியில் விழுந்த ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் மாயம்!

  • February 24, 2024
  • 0 Comments

உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான ஜிம்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், சுற்றுலாப் பயணி பரந்த மழைக்காடுகளில் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். “சுற்றுலா பயணிகளைத் தேடும் காவல்துறையை உள்ளடக்கிய ஒரு முழு அளவிலான குழு எங்களிடம் உள்ளது. நாங்கள் மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் டிராக்கர்களை தரையில் நிறுத்தியுள்ளோம்,” என்று கூறியுள்ளார். […]

இலங்கை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. நேற்று (23) கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4,000 வரையான பக்தர்களே வருகை தந்ததுடன் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

இலங்கை

இலங்கையில் அரிசி விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு பயனில்லை!

  • February 24, 2024
  • 0 Comments

சந்தையில் அரிசி விலை உயர்ந்தாலும், பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன கூறுகிறார். அதேபோன்று நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என […]

பொழுதுபோக்கு

ரஜினியால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. வேடிக்கை பார்க்கும் லைக்கா

  • February 24, 2024
  • 0 Comments

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படம் பல மாதங்களாக இழுவையில் இழுத்து அடித்துக் கொண்டது. ஆனால் தற்போது தான் தெரிகிறது விடாமுயற்சி படம் எதுனால இழுத்தடித்தது என்று. அதாவது இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தின் ரஜினி மொகைதீன் பாய் கேரக்டரில் லால் சலாம் படத்தில் கமிட்டாகி விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக அதிக பொருட்செலவு செய்து வந்ததால் லைக்காவால் விடாமுயற்சி படப்பிடிப்பை யோசிக்க முடியாமல் போய்விட்டது. […]

இலங்கை

மியன்மார் பயங்கரவாத குழுவால் மற்றுமொரு இலங்கையர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

  • February 24, 2024
  • 0 Comments

மியன்மார் பயங்கரவாத குழுவால் மற்றுமொரு இலங்கையரும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இலங்கையர் மியான்மரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவலுக்கு […]

இலங்கை

“இலங்கையில் இரவு பொருளாதார முக்கிய பங்கு வகிக்கும்”: டயானா கமகே வலியுறுத்தல்

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொருளாதார வளர்ச்சியை உந்துவதில் இரவு வாழ்க்கையின் முக்கியப் பங்கை வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் வருவாயில் கணிசமான 70 சதவீதத்தை இரவுப் பொருளாதாரம் கொண்டுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். இரவு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இரவு நேரம் என்பது மக்கள் பொதுவாக உணவு மற்றும் பொழுதுபோக்கு போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதன் விளைவாக வரிகள் மூலம், குறிப்பாக கலால் வரிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். […]

இலங்கை

குருநாகல் வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைகளை நிறுத்த நடவடிக்கை!

  • February 24, 2024
  • 0 Comments

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல சிறுநீரக நோயாளர்கள் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பிரிவில் இருந்து டயாலிசிஸ் செய்துகொண்ட 05 சிறுநீரக நோயாளர்கள் சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியா தொற்று […]

இந்தியா

தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொல குப்பம் ரோடு பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற பாடசாலை சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”பாரதிதாசன் பேட்டையில் உள்ள அவரது வீட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான குடிநீர் டேங்க கில் தண்ணீர் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதன்போது தேவேந்திரன் மீது மின்சாரம் தாக்கியுளளது. சம்பவத்தை கண்ட […]

error: Content is protected !!