முதல்முறையாக பின்னடைவை சந்தித்துள்ள இஸ்ரேல்… ஒற்றைத் தாக்குதலில் 24 வீரர்கள் பலியான சோகம்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில்லாத பின்னடைவாக, ஒற்றைத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்களை இழந்துள்ளது இஸ்ரேல். அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் நடத்திய கோரத்தாக்குதலை அடுத்து, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியபோது தனது 2 நோக்கங்களை தெளிவுபடுத்தி இருந்தது. அதில் முதலாவது ஹமாஸ் அமைப்பை பூண்டோடு அழிப்பது என்றும், மற்றொன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டவர்களை மீட்பதென்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது. ஆனால் வெளிப்படையாக இஸ்ரேல் தெரிவிக்காத […]













