ஆசியா

அமெரிக்காவில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட மர்மப் பெட்டி!

  • December 21, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள ஒரு மறுசுழற்சி ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட அட்டைப் பெட்டிக்குள் ஒரு ஜோடி மனித கால்களைக் கண்டு திகிலடைந்தனர். யாரேனும் ஒருவர் கொலை செய்யப்பட்டு கொள்கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பில் தாய்லாந்து பொலிஸார் அமெரிக்க பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். டிசம்பர் 19, செவ்வாய்கிழமை, பாங்காக்கிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள ஸ்ரீராச்சாவிற்கு வெளியே உள்ள ஆலைக்கு சரக்கு வழங்கப்பட்டது. கார்ட்போர்டின் அடுக்குகளை இறக்கும்போது, இளஞ்சிவப்பு லேஸ்கள் […]

பொழுதுபோக்கு

நான் வேணுமா? உன் அம்மா வேணுமா? கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்?

  • December 21, 2023
  • 0 Comments

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கும் பிரச்னை என்று தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் அதுகுறித்து புதிய விஷயங்களை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். சல்மான் கானுடனான காதல் முறிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலிக்க தொடங்கினார். பிறகு இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே அவர்கள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கான நிதி உதவியை அதிகரித்துள்ள சுவிஸ்

  • December 21, 2023
  • 0 Comments

உக்ரைனில் வாழும் மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக, உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவியை சுவிட்சர்லாந்து அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்து, ஏற்கனவே உக்ரைனுக்கு 13 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்நிலையில், மேலும் 12 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை உக்ரைனுக்கு வழங்குவது என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சுவிட்சர்லாந்து வழங்கிய நிதி, 1,000 குடியிருப்புகளை பழுதுபார்க்க உதவியுள்ள நிலையில், மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்ள வசதியாக, 1,300 வீடுகளுக்கு ஹீற்றர்களை வழங்க உள்ளது சுவிட்சர்லாந்து அரசு. இதுபோக, சுவிஸ் […]

இலங்கை

இலங்கையில் 09 ஆம் வகுப்பு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! பெற்றோர்களின் கவனத்திற்கு..!

  • December 21, 2023
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அதே கல்லூரியின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கிதுல்லே பல்லேடோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது. குறித்த ஆசிரியர்  மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட […]

உலகம்

உலகவளவில் திடீரென முடங்கியது எக்ஸ் தளம்… தவிக்கும் பயனாளர்கள்!

  • December 21, 2023
  • 0 Comments

உலகளவில் எக்ஸ் தள பயன்பாடு முடங்கியுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக எக்ஸ் தளம் முடங்கியதால் அதன் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். உலக அளவில் எக்ஸ் சேவை மீண்டும் முடங்கியுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எக்ஸ் சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. எக்ஸ் செயலி மற்றும் இணையதள பக்கத்திலும் அதை பயன்படுத்த முடியவில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். எக்ஸ் பயனர்கள் தங்களது போஸ்ட்கள் தெரியவில்லை என்றும் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு!

  • December 21, 2023
  • 0 Comments

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான முதற்கட்டப் படிப்புகள் நாளையுடன் (22.12) முடிவடைவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட மூன்றாம் தவணை பிப்ரவரி 1ம் திகதி தொடங்க உள்ளது. புத்தாண்டின் முதல் பாடசாலை தவணை பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் முன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

சீதுவ பிரதேசத்தில் மருந்தகங்கள் சுற்றிவளைப்பு – ஐவர் கைது!

  • December 21, 2023
  • 0 Comments

வைத்திய பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த 5 சந்தேக நபர்களை சீதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (20) கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சீதுவ சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவுடன் சீதுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் சீதுவை மருந்தகங்களை சோதனையிட்டனர். இதன்போது பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல், மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த குற்றத்திற்காக 1600 மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, […]

பொழுதுபோக்கு

“ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர்..” டங்கி டிவிட்டர் விமர்சனம்…

  • December 21, 2023
  • 0 Comments

ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள டங்கி திரைப்படம் இன்று வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டங்கி ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஷாருக்கான் நடித்துள்ள டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. அவரும் ஷாருக்கானும் இணைவதாக அறிவிப்பு வெளியான நாள் முதலே டங்கி படம் […]

பொழுதுபோக்கு

குடிக்கு மட்டுமில்லையாம்.. அந்த விஷயத்திலும் வாரிசு நடிகை அடிமை தானாம்…

  • December 21, 2023
  • 0 Comments

வாரிசு நடிகை குடிப்பழக்கத்துக்கு மட்டும் அடிமை இல்லை என்றும் பல பார்ட்டிகளுக்கு சென்று வரும் அவர் அந்த விஷயத்திலும் பயங்கர அடிமை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமா வாய்ப்பு எந்தவொரு போராட்டமும் இல்லாமல் வாரிசு நடிகர்களுக்கு கிடைத்து விடுகின்றன. ஆனால், அதை தக்க வைத்துக் கொள்ளாமல் எப்படி ஆட்டம் போட்டாலும் மீண்டும் வந்தால் பட வாய்ப்பு காத்துக் கிடக்கும் என்கிற மமதையால் தான் பிரபலங்களின் வாரிசுகள் இப்படி ஆட்டம் போட்டு வருகின்றனர். சிறந்த நடிகர் […]

இலங்கை

இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை! பொலிஸார் குவிப்பு

  • December 21, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு […]

error: Content is protected !!