படுக்கையில் கிடைத்த துண்டுச்சீட்டு: சாரா கொலை வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!
பிரித்தானியாவில் வீடொன்றில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியினரான சாரா வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி, அதிகாலை 2.47 மணிக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்தானிய பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, Woking என்னுமிடத்திலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள் பொலிஸார்.வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார், சிறுபிள்ளைகளுக்கான கட்டில் ஒன்றில் போர்வைக்கடியில் ஒரு சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் உயிரிழந்துவிட்டதாக, அதிகாலை […]













