ஆசியா

மியன்மாரில் கனமழை : 10 ஆயிரம் பேர் இடம்பெயர்வு!

  • October 9, 2023
  • 0 Comments

மியான்மரின் தெற்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏறக்குறை 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. அத்துடன் நாட்டின் மிகப் பெரிய ரயில் போக்குவரத்து தடை பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலன், நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லே ஷ்வே ஜின் ஓ, பாகோ பகுதியில் கடந்த வாரம் தொடங்கிய தொடர் மழையால் அதன் தலைநகரான பாகோ டவுன்ஷிப்பின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதுவரை எந்த […]

இலங்கை

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிலையில், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகள் 2024 ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அடுத்த வருடத்திற்குள் விடுபட்ட பாடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும், அதற்கேற்ப விடுமுறை காலம் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். “இளைஞர்களுடன் ஒப்பிடும்போது நாட்டின் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நாட்டின் மீது அதிக சுமை சேர்க்கப்படும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க, […]

இலங்கை

ஶ்ரீலங்கன் விமான சேவையை ஒழுங்காக நடத்தாவிட்டால் மற்ற விமானங்கள் களமிறக்கப்படும்!

  • October 9, 2023
  • 0 Comments

ஶ்ரீலங்கன் விமான சேவையை ஒழுங்காக நடத்தாவிட்டால் ஏனைய விமான சேவைகளை இலங்கையில் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட விமான தாமதம் காரணமாக சுமார் 6 மில்லியன் டொலர்கள் கூடுதலாக செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி […]

இலங்கை

யாழில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

  • October 9, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பெதுருதுடுவ பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கைது செய்துள்ளனர். 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெதுருதுடுவ அல்வாய் பகுதியில் சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாரை தாக்கிவிட்டு அவர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்தே பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் பெதுருதுடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் […]

இலங்கை

வெல்லம்பிட்டிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

வெல்லம்பிட்டியவில் இன்று (ஒக்டோபர் 09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்தை பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வசூல் மழை

  • October 9, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவந்த படம் ஜெய்லர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத வசூலை ஜெயிலர் படம் செய்தது. அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபத்தையும் ஜெயிலர் கொடுத்தது […]

மத்திய கிழக்கு

காஸா  பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

  • October 9, 2023
  • 0 Comments

ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா  பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி காசா பகுதிக்கான எரிபொருள், உணவு விநியோகத்தை முடக்கியுள்ளதாக அந்நாட்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், இது “மிருகத்தனமான மக்களுக்கு” எதிரான போரின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். 2007 ஆம் ஆண்டு பாலஸ்தீனப் படைகளிடம் இருந்து ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலும் எகிப்தும் காஸா மீது பல்வேறு அளவிலான முற்றுகைகளை விதித்துள்ளமை […]

இந்தியா

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் சீனாவுக்கு தொடர்பு?: வெளியான பரபரப்பு தகவல்

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஏஜெண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர். இவரது கொலை பின்னணியில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் நிலைமை கவலையளிக்கிறது – கிரம்ளின்!

  • October 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்களில் நிலவும் போர் பதற்றம் குறித்து மிகுந்த கவலையடைவதாக கிரம்ளின் இன்று (09.10) தெரிவித்துள்ளது. இந்த சூடான நிலைமை மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலாக அதிகரிக்கக்கூடும் என்றும் கிரம்ளின் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிரம்ளின் செய்தித் தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கோவ்  மத்திய கிழக்கில் இஸ்ரேலைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறோம். இந்த சூழ்நிலையானது கசிவு அபாயத்தால் நிறைந்துள்ளது, எனவே, நிச்சயமாக, […]

இலங்கை

யாழில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு : பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (08) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.