ஆசியா

கஜகஸ்தான்- சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து ;32 பேர் பலி!

  • October 28, 2023
  • 0 Comments

கஜகஸ்தானின் கரகாண்டா பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரகாண்டா பகுதியில் எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தானது இன்று காலை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அந்த சுரங்கத்தில் வேலை செய்து வந்த 252 பேரில், 208 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், தீ விபத்தில் சிக்கி 32 பேர் கருகி உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது […]

இலங்கை

ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெரும்பான்மையினர் 7பேருக்கு யாழ். பல்கலைக்கு நியமனம்!

  • October 28, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியவருகிறது. பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்களுக்குப் பல்பணி மேம்பாட்டு உதவியாளர்களை வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் பல்கலைக் கழகங்களில் உள்ள பதவி வெற்றிடங்களுக்காக நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. நாடளாவிய […]

உலகம்

ரஷ்ய சொத்துக்களில் இருந்து இலாபத்தை கைப்பற்றி உக்ரேனுக்கு ஆதரவாக வழங்க திட்டம்

ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து இலாபத்தை கைப்பற்றி உக்ரேனுக்கு ஆதரவாக பில்லியன் கணக்கான யூரோக்களை செலுத்தும் திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பிலிருந்து, மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்ய மத்திய வங்கிக்கு சொந்தமான 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்த வருமானத்தை உக்ரைனுக்கு செலுத்துவதற்கான வழிகளைத் தேடுகின்றனர், ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கி இந்த நிதிகளுக்கான அணுகல் தொடர்பான யூரோவிற்கு […]

மத்திய கிழக்கு

‘இன்றிரவு தாக்குதல்கள் தீவிரமாக்கப்படும்’ ; எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

  • October 28, 2023
  • 0 Comments

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இன்று இரவு எங்களின் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் என்று அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் எழுந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான தாக்குதல் மூன்று வாரங்களாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த அக்.7ம் திகதி இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படை மோசமான தாக்குதலை நடத்தியது. மேலும் பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது. இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. […]

இலங்கை

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தயார் : தயாசிறி ஜயசேகர!

  • October 28, 2023
  • 0 Comments

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாட்டுக்கு புதிய அரசியல் இயக்கம் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசியலில் எந்த ஏமாற்றமும் இல்லை. பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. அதனால் தியானத்திற்கு சென்றேன். தியானம் செய்ய வேண்டும் என்ற சிறு வேண்டுகோளும் […]

தமிழ்நாடு

தாயிடமிருந்த ஒன்றரை வயது கைக்குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்!

  • October 28, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த திருவொற்றியூரில் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று, தாயின் கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை கடித்துக்குதறி, முகத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் பெரியார் நகர், விவேகானந்தர் தெருவில் வசித்து வரும் தேவி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து, குழந்தையின் முகத்தில் கடித்துக்குதறி உள்ளது. நாயிடமிருந்து குழந்தையை […]

இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி;பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கேள்வி

  • October 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி […]

ஐரோப்பா

பிரான்சில் குளிர்கால நேரமாற்றம்

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் அக்டோபர் மாதத்தின் கடைசி சனி ஞாயிறு இரவில் நேரமாற்றம் இடம்பெற்று வருகிறது. அதன்படி இன்று இரவு அல்லது ஞாயிறு அதிகாலை நேரம் மாற்றம் இடம் பெற உள்ளது. இந்த நடைமுறை 1916 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் தேசத்தில் கடைப்பிடிக்க தொடங்கப்பட்டது. பின்னர் 1944ம் ஆண்டு இந்த நடைமுறை கைவிடப்பட்டது, மீண்டும் 1975 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பிரான்சில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று நல்லிரவைத் தாண்டி நாளை. 29/10 அதிகாலை […]

இலங்கை

மூத்த பாடகர் சுனில் சிறிவர்தன காலமானார்

பழம்பெரும் பாடகர் சுனில் சிறிவர்தன தனது 82வது வயதில் இன்று (ஒக்டோபர் 28) காலமானதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளன. அதன்படி, பாடகர் மதுமாதவ அரவிந்த மற்றும் நடிகர் தனஞ்சய சிறிவர்தன ஆகியோரின் தந்தையான சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இலங்கை

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி!

  • October 28, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான  பணத்தை மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில்  குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணையில்  இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த   35 மற்றும் 57 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய விசேட […]