இலங்கை

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி!

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான  பணத்தை மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில்  குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையில்  இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த   35 மற்றும் 57 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்