இலங்கை

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • October 29, 2023
  • 0 Comments

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காது என அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் மோதல்களுக்கு மத்தியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

  • October 29, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர். மீனவர்களை […]

இலங்கை

சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பம்

தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கபட்டு துப்பரவு பணிகள் நடைபெற்றது. வழமை போல் இவ்வருடமும் மாவீரர் தின நிகழ்வுகள் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தமிழ்நாடு

தொப்புள் கொடியுடன் கழிவுநீர் தொட்டி மீது குழந்தையை வீசி சென்ற தாய்…!

  • October 29, 2023
  • 0 Comments

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தொட்டி மீது குழந்தையை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தின் பின் புறத்தில் பிறந்த ஒரு சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் கழிவு நீர் தொட்டியின் மீது வீசி சென்றுள்ளனர். அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவர் இதை பார்த்து, வைத்தியரிடம் தெரிவித்த பின்னரே குழந்தையை மீட்டெடுத்து குளிரூட்டும் அறையில் வைத்து […]

இலங்கை

அதிர்ச்சி சம்பவம்… புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை!

  • October 29, 2023
  • 0 Comments

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் பெரிய தந்தைக்கும் குறித்த நபர் ஒருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தலையில் தாக்கப்பட்டதனால் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 71) கைவேலி பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். […]

உலகம்

புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி 18 பேர் காயம்!

  • October 29, 2023
  • 0 Comments

புளோரிடாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (29.10) இடம்பெற்றுள்ளது. நகர வீதியொன்றில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துடன்  18 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பல மதுக்கடைகள் மற்றும் கிளப்புகளைக் கொண்ட ஒரு பகுதியில் இந்த சண்டை நிகழ்ந்துள்ளது.  துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏதேனும் மதுக்கடைகளுக்குள் இருந்தார்களா என்பது  குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். “இது இரு குழுக்களுக்கு இடையே […]

இலங்கை

ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாத என்மீது பொய்யான வழக்கு தாக்கல்: கௌரி தெரிவிப்பு

”மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத எனக்கு கலந்துகொண்டதாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கொண்டு எனக்கு வழக்கு தாக்கல் செய்த பொலிசார் நீதிதுறையை தவறான பாதைக்கு கொண்டு செல்லுகின்ற படுபயங்கரமான நிலையே உள்ளது எனவே பொலிசாரின் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்” என பாதிக்கப்பட்ட சமூகசெயற்பாட்டளரான கௌரி கோரிக்கை விடுத்துள்ளனார். மட்டு மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் சமூகசெயற்பாட்டளரான கௌரி இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”கடந்த 8 ம் திகதி ஜனாதிபதி செங்கலடி பாடசாலைக்கு […]

உலகம்

2,500 உழியர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கவுள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

  • October 29, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் லே ஆஃப் எனப்படும் பணி நீக்கம் தொடர்கிறது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் இணைந்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் 42,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. […]

உலகம்

கஜகஸ்தான் சுரங்க தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • October 29, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (29.10) 42 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேரைக் காணவில்லை என்று கஜகஸ்தானின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகத்தின் செய்தி சேவை தெரிவித்துள்ளது. அழிந்த சுரங்க உபகரணங்கள் மற்றும் சில இடங்களில் இடிபாடுகள் இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபடுகின்றன” என்று மேலும் கூறப்பட்டுள்ளது. கஜகஸ்தானின் கரகண்டா பகுதியில் அமைந்துள்ள லக்சம்பேர்க்கைச் சேர்ந்த எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான கோஸ்டென்கோ சுரங்கத்தில் சனிக்கிழமை தீ […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் தாக்குதலில் 08 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

  • October 29, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (29.10) வரை 8,005 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களில் 3,342 குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இது தொடர்பான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.