செய்தி

புக்குஷிமா அணு ஆலையில் கழிவுநீர் மூன்றாம் கட்டமாக வெளியேற்றப்படும்!

  • November 4, 2023
  • 0 Comments

ஜப்பானில் ஃபுக்குஷிமா அணு ஆலையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் 3ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 7,800 டன் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக ஆலையை நிர்வகிக்கும் TEPCO நிறுவனம் தெரிவித்தது. கழிவுநீரை வெளியேற்றும் இந்த நடவடிக்கை 17 நாட்களில் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் AFP செய்தியிடம் கூறியது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து கழிவுநீர் கட்டங்கட்டமாக வெளியேற்றப்படுகிறது. அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதத்துக்குள் நாலாம் கட்ட வெளியேற்றத்தை மேற்கொள்ள TEPCO திட்டமிடுகிறது. 540 ஒலிம்பிக் நீச்சல்குளங்களில் நிரப்பக்கூடிய அளவுக்குக் […]

ஆசியா

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் – மண்னோடு புதைந்த மக்கள் – 128 பேர் பலியான சோகம்

  • November 4, 2023
  • 0 Comments

நேபாளத்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து […]

ஐரோப்பா

ரஷ்ய வைரங்களுக்கு தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

  • November 4, 2023
  • 0 Comments

ரஷ்ய வைரங்களுக்கும் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உலகின் ஒட்டுமொத்த வைர உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவில் வெட்டி எடுக்கப்பட்டு, பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகர தொழிற்சாலைகளில் பட்டை தீட்டப்பட்டு வருகிறது. வைர ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ரஷ்ய அரசு ஈட்டி வருவதால் அதற்கு தடை விதிக்க ஜி-7 நாடுகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் இனி உணர்வுகளை சித்திரமாக வெளிப்படுத்தலாம்!

  • November 4, 2023
  • 0 Comments

WhatsApp செயலியில் உரையாடும்போது உணர்வுகளை வெளிப்படுத்த இனி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) கைகொடுக்கவிருக்கிறது. வார்த்தைகளுடன் இணைந்து எந்த ’emoji’ சின்னம் அல்லது stickerஐப் (மின்-ஒட்டுவில்லை) பயன்படுத்தினால் சரியாக வரும் என்று நம்மில் பலர் யோசிப்போம்… விருப்பத்திற்கு ஏற்ற மின்-ஒட்டுவில்லைகளை இனி செயற்கை நுண்ணறிவு அம்சம் உருவாக்கிக் கொடுத்துவிடும். எதைச் சித்திரமாகப் பார்க்கவிரும்புகிறீர்கள் என்று குறிப்பிட்டால் போதும். – WhatsApp-இல் மின்-ஒட்டுவில்லைகள் இருக்கும் smiley emojiக்குச் செல்லவேண்டும் – ‘create’ அதாவது உருவாக்கு எனும் பொத்தானை அழுத்தவேண்டும். […]

ஆசியா

சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த திட்டம்!

  • November 4, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மிகவும் போட்டித்தன்மையுள்ள வேலைகளின் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த சம்பளத்தை அதிகரிக்க 72 சதவீத முதலாளிகள் விரும்புவதாக ஆய்வில் கூறியுள்ளனர். சிங்கப்பூரில் இந்த ஆண்டின் நிலவரப்படி, பணியமர்த்துவது மிகவும் அல்லது ஓரளவு போட்டித்தன்மை மிக்கதாக இருந்ததாக 80 சதவீத நிறுவனங்கள் கண்டறிந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் போட்டியிட முடியாததால் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் 10ல் நான்கு பேர் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடும் நெருக்கடியில் மக்கள் – சிக்கி தவிக்கும் பொலிஸார்

  • November 4, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் லெட்சர்ஜெனர்ல் என்ற அமைப்பானது குறிப்பாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைப்பானது அண்மைக் காலங்களாக கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றது. மேலும் இவர்கள் வீதி போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் பாதசாரிகள் சுதந்திரமாக பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணத்தினால் பொலிஸார் கூடுதலான நேரத்தை இந்த விடயம் தொடர்பில் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஜெர்மனியில் உள்ள யூத அமைப்புக்கள் குறித்த சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைப்புக்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை தற்பலிகமாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் தடுப்பூசியினால் உயிரிழந்த சிறுவன்

  • November 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தடுப்பூசியினால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி 12 வயதுடைய ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவர்தடுப்பூசியினை போட்டுக்கொண்டார். அதன் பின்னர் இருக்கையில் அமர்ந்த அவர், திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். பின்னர் மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து அங்கு அவர் உயிரிழந்தார். அதையடுத்து, பிரான்சின் சுகாதார அமைச்சர் சிறுவனது இழப்புக்கு தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறுவனது சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தியதில், தடுப்பூசியின் ஒவ்வாமையே மரணத்துக்கு […]

இலங்கை

ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் – இலங்கை நோக்கி படையெடுக்கும் பயணிகள்

  • November 4, 2023
  • 0 Comments

போலந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் முதல் விமானம் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், இந்த குழுவினர் இலங்கை சென்றுள்ளனர். 186 பேர் கொண்ட இந்த சுற்றுலாப் பயணிகள் குழு போலந்து – வார்சா நகரிலிருந்து என்டன் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ENT 1561 என்ற சிறப்பு விமானத்தில் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். போலந்து சுற்றுலாப் பயணிகள் குளிர்காலத்தில் இலங்கைக்கு வருவது இது 13வது முறையாகும். […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஐவர் பலி

  • November 3, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் பொலிஸ் படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆயுதக் குழுக்களின் தாயகமாக இருந்த தேரா இஸ்மாயில் கான் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. போலீஸ் ரோந்து செல்லும் பாதைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி முகமது அட்னான் தெரிவித்தார். இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது அருகில் வைக்கப்பட்ட வெடிகுண்டு காரணமாக […]

இலங்கை செய்தி

தாய் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் – பரிதாபமாக உயிரிழந்த மகள்

  • November 3, 2023
  • 0 Comments

தலதாகம்மன கபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தபத்து முல்லை பிரதேசத்தை சேர்ந்த ஹிமாயா கருணாரத்ன என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். மாணவி தனது தாயார் […]