தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தபால் ஐக்கிய முன்னணியினால் இன்றும் நாளையும் அனைத்து தபால் நிலையங்களிலும் முன்னெடுக்கப்படும் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக தபால் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மூன்று நாட்களுக்கு அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்ய தபால் […]













