விளையாட்டு

ICC தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இரு இந்திய வீரர்கள்

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.

இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content