யாழ் சிறையில் உயிரிழந்த கைதி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்
விளக்கமறியல் கைதியாக இருந்து யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளைஞன் பொலிஸார் தன்னை தாக்கி சித்திர வதை செய்ததாக வைத்தியசாலையில் தெரிவித்த காணொளிகள் உயிரிழந்தவரது உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை 3,4 மணித்தியாலங்களுக்கு மேலாக முகத்தினை சொப்பின் பாக்கினால் கட்டிவைத்து தாக்கி சித்திர வதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் காணொளியில் தெரிவித்துள்ளார். களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை […]













