செய்தி விளையாட்டு

உலக கோப்பை இறுதிப்போட்டியில் அத்துமீறி புகுந்த பாலஸ்தீன ஆதரவாளர்

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று இந்தியாவில் தொடங்கியது.

பல சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19 நடைபெற்றது.

மதியம் தொடங்கிய இப்போட்டியில் “டாஸ்” வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

அப்போது திடீரென பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து ஒரு நபர், மைதானத்திற்குள் அத்துமீறி புகுந்தார். இவரை கண்ட பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரை தடுக்க முயன்றனர்.

முகத்தை துணியால் மூடி, பாலஸ்தீன ஆதரவு வாசகங்களை கொண்ட டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த நபர் வேகமாக ஓடி, இந்திய வீரர் விராட் கோலிக்கு அருகே சென்றார்.

அவரை நெருங்கிய அந்த நபர், ஒரு சில வினாடிகள் விராட் கோலியின் தோளில் கை போட முயன்றார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி வெளியேற்றினர்.

இச்சம்பவத்தால் சில வினாடிகள் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாவலர்கள் அந்த நபரை அழைத்து சென்றனர். அத்துமீறிய நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி