ஆசியா

சிங்கப்பூரில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களால் கடும் கோபத்தில் பெண்

  • December 7, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உள்ள Punggol Plazaவில் அமைந்துள்ள McDonald’s உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர், இறைச்சி சேர்க்கப்பட்ட பர்க்கர்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு, அதனை சாப்பிட முயன்ற போது, இறைச்சி சரியாக வேகாமல் இருந்துள்ளதையும், பர்க்கர் சரியாக சமைக்கப்படாமல் இருந்துள்ளதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து அந்த பெண், 04- ஆம் திகதியன்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அந்த மெக்டொனால்ட்ஸ் […]

தமிழ்நாடு

மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்

  • December 7, 2023
  • 0 Comments

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த சென்னை புறநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் வேலையில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் நிலைமை சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் வரை இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் புறநகர் மக்கள் இன்னும் வீட்டை […]

ஐரோப்பா

மரணங்களுக்கு வருந்துகிறேன் – பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வெளியிட்ட தகவல்

  • December 7, 2023
  • 0 Comments

COVID-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்கு வருந்துகிறேன் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்குத் தாம் மிகவும் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றுச் சூழலை நாடு கையாண்ட விதம் குறித்த அதிகாரபூர்வ விசாரணையில் அவர் சாட்சியம் அளித்தார். விசாரணையின் தொடக்கத்தில் அவர், சாட்சியம் அளிப்பதில் மகிழ்ச்சிகொள்வதாகவும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தாரும் எதிர்கொண்ட வேதனைக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார். ஜொன்சன் 2 நாள்களுக்கு விசாரிக்கப்படுவார். உலகில் கோவிட் […]

வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – வல்லுநர்கள் வெளியிட்ட தகவல்

  • December 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலியக் குடியேறிகளுக்குப் பயணத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் வசிப்போர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் எடுத்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான அந்த நடவடிக்கை அரிது என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒக்டோபர் மாதம் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை தொடங்கியது முதல் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இஸ்ரேலிய ராணுவப் படையினரும் குடியேறிகளும் காரணம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

கொழும்பு தாமரை கோபுரத்தின் முதலாவது சுழலும் உணவகத்தை திறந்து வைக்கும் ஜனாதிபதி

  • December 7, 2023
  • 0 Comments

கொழும்பு தாமரை கோபுரத்தின் முதலாவது சுழலும் உணவகம் டிசம்பர் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படும் இந்த உணவகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலருக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்பது பலரது கருத்தாகும். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை அமர்ந்து உணவு பெற்றுக் கொள்ள முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரவு 7.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக முதலீட்டு […]

அறிந்திருக்க வேண்டியவை

பருவநிலை வரம்பு நிலைகளை மீறி இயங்கும் உலகம் – விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கை

  • December 7, 2023
  • 0 Comments

பூமியில் வாழ்வதற்கு அவசியமான 5 முக்கிய பருவநிலை வரம்பு நிலைகளை உலகம் மீறும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய வெப்பமயமாதல் அளவுகளால் பார்க்கும் போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐ.நா. பருவநிலை மாநாட்டில் 200 விஞ்ஞானிகள் குழு புதன்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்னர். டுபாயில் நடைபெற்று வரும் ஐ.நா. சா்வதேச பருவநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட பருவநிலைக்கான சா்வதேச வரம்பு நிலைகள் அறிக்கையானது இயற்கை அமைப்புகளின் எல்லைகளில் இதுவரை நடத்தப்பட்ட மிகவும் முழுமையான மதிப்பீடாகும். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp அறிமுகம் மற்றுமொரு அதிரடி அம்சம்!

  • December 7, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜூன் 16ம் திகதி ஐஓஎஸ் பயனர்களுக்காக ‘ஸ்கிரீன் ஷேரிங்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் செய்யும்பொழுது தங்களுடைய மொபைல் ஸ்க்ரீனை ஷேர் செய்ய முடியும். இதனால் உங்கள் மொபைலில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை உங்களுடன் வீடியோ காலில் இருக்கும் நபராலும் பார்க்க முடியும் கிட்டத்தட்ட இது ஒரு ஜூம் வீடியோ கால் செயலி போல இருக்கும். இதே ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் […]

விளையாட்டு

39 வயதில் மீண்டும் அணிக்கு திரும்பும் டு பிளெசிஸ்..?

  • December 7, 2023
  • 0 Comments

ICC ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல், ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை வென்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியும் கவனம் செலுத்தி வருகிறது. டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜூன் 3 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்காக சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து ஆலோசித்து வருவதாக பாஃப் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் அடுத்தக்கட்ட ஆபத்து

  • December 7, 2023
  • 0 Comments

அடுத்த சில நாட்களில் அவுஸ்திரேலியா முழுவதும் வெப்பமான காலநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவைத் தவிர ஒவ்வொரு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அதிக வெப்பநிலை கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ அபாயம் குறித்து இதுவரை எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் மரணம்

  • December 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் Las Vegas உள்ளNevada பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரென்று நம்பப்படுகிறது. என்ன காரணத்துக்காக அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் விசாரணை தொடர்கிறது. தற்போது நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியு்ளளனர். அதிகாலை சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையில், சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழகமும் மாநிலத்திலுள்ள இதர நெவாடா கல்வி நிலையங்களும் […]