இலங்கை

யாழ்-மானிப்பாய் மருதடி பிள்ளையாரை வழிபட்ட நடிகை ரம்பா

  • December 14, 2023
  • 0 Comments

நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொதேர்ன் யுனியின் அனுசரனையில் டிசம்பர் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் […]

இலங்கை

யாழில் கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கையெழுத்து போராட்டம்!

  • December 14, 2023
  • 0 Comments

ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்கின்றோம்,கடல் உணவு இறக்குமதியால் உள்ளுர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம். கடற்றொழில் சமூகத்திற்கு 2024க்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையையும் […]

ஐரோப்பா

ஊழல் குற்றச்சாட்டு : பைடன் மீது விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

  • December 14, 2023
  • 0 Comments

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஜோ பைடனுக்கு எதிரான ஊழல் பேரங்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,  பதவி நீக்கம் தீர்மானத்தை கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான பதவி நீக்க விசாரணைக்கான தீர்மானத்தின் மீது நேற்று (13.12) பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன், அது தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 221 வாக்குகளும், எதிராக 212 வாக்குகளும் […]

மத்திய கிழக்கு

காசா சுரங்கங்களில் கடல் நீரை வாரி இறைக்கும் இஸ்ரேல்…

  • December 14, 2023
  • 0 Comments

ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பதுங்கியிப்பதாக கூறப்படும் காசா சுரங்கங்களில் கடல்நீரை இறைத்து, அவற்றை அழிக்கும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. வான்படைத் தாக்குதலுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேல் ராணுவத்தினர் காசா வீதிகளில் இறங்கி நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஹமாஸ் உட்பட இதர ஆயுதக் குழுவினரை பூண்டோடு ஒழிக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இயங்கும் பகுதி என்று முதலில் வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் அழித்தது. இதனையொட்டி பாலஸ்தீன குடிமக்கள் தெற்கு காசாவில் அடைக்கலம் சேர்ந்தனர். […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரிப்பு!

  • December 14, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் இந்த கிறிஸ்துமஸில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஷெல்டரின் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனம் கட்டுப்பாட்டை மீறியதாகவும், அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டு எந்த இரவிலும் வீடற்ற நிலையில் 309,550 பேர் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் தற்காலிக தங்குமிடங்களில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த (2022) ஆண்டுடன் ஒப்பிடுகையில்,  271,421 அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் சிசுவொன்றின் சடலம் மீட்பு!

  • December 14, 2023
  • 0 Comments

மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிரந்துருகோட்டே பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட போதும் அழுகிய நிலையில் இருந்த நிலையில் சடலத்தை அந்த இடத்தில் வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் எவிக்‌ஷன்…

  • December 14, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் mid week eviction நடந்துள்ளதாகவும் அதில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், தற்போது 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் போட்டி கடுமையாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார வாரம் மக்கள் அளிக்கும் வாக்குகளின் […]

இலங்கை

இலங்கை – புத்தளம் பகுதியில் புதிய நோய்கள் பரவி வருவதாக அறிவிப்பு!

  • December 14, 2023
  • 0 Comments

இலங்கை புத்தளம் பகுதியில் புதிதாக இரு பரவா நோய்கள் பரவி வருவதாக   சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார். ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற தாவரங்கள் பெருகியதே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “பான்சோனியா என்ற கொசு வகைகள் பரவுகின்றன. வேர் அமைப்பு.தற்போது 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பராவா நோய், […]

இலங்கை

இலங்கையில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும்!

  • December 14, 2023
  • 0 Comments

VAT வரி அதிகரிப்பால் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அச்சங்கத்தின்  தலைவர்  கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனவரி மாதத்தில் இருந்து சாதாரண பேருந்துக்கு  ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சம் செலவாகும். 18% வட் வரி அதிகரிப்பால் இது மேலும் 20 இலட்சத்தால் உயரும். அத்துடன்  உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் […]

இலங்கை

யாழில் மின் ஒழுக்கால் ஏற்பட்ட தீ விபத்து எரிந்து நாசமான கடை கட்டிடத்தொகுதி!

  • December 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடை கட்டிடத்தொகுதி தீ விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நேற்று(13) இரவு 10:45 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.அதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!