அமெரிக்கா-தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சிறுவன்: பெற்றோர் மீது நடவடிக்கை!
அமெரிக்காவில் 4 வயது சிறுவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவத்தில், அஜாக்கிரதையாக இருந்த பெற்றோர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது வெஸ்ட்மோர் கவுண்டி. இதன் ஆளுகைக்கு கீழ் உள்ள ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியில் 4 வயதான ரோனி லின் என்ற சிறுவன் கடந்த ஜூலை 6ம் திகதி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டான். படுக்கையறையில் கிடந்த சிறுவனை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர். அச்சிறுவன் கடந்த 6 […]













