இலங்கை

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி!

நாளை (03) முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் நீர் கட்டணம் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (02) இரவு வெளியிடப்படவுள்ளது.  

இலங்கை

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்தும் அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 143,039 சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பதிவு செய்ததன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறை தொடர்ந்து மீண்டு வருகிறது. ஜூலை 2022 இல், நாடு பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இருந்தபோது, ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 47,293 ஆகக் குறைந்துள்ளது. ஜூலை 2022 உடன் ஒப்பிடும்போது, ஜூலை 2023 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகை 202.4% அதிகரித்துள்ளது என்று […]

பொழுதுபோக்கு

15 வருடங்களுக்குப் பிறகு ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் புது வெர்ஷன் டிரைலர் வெளியானது…

  • August 2, 2023
  • 0 Comments

சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தை இயக்கியது மட்டுமல்லால் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு என பலர் நடித்திருந்தனர். மதுரையை பின்னணியாக கொண்டு அதிரடி ஆக்ஷன் படமாக உருவான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி 15ஆண்டுகள் ஆனாலும் படத்தை கொண்டாடி வரும் ரசிகர்களுக்காக ரீ […]

உலகம்

கிளர்ச்சி வெடித்துள்ள நைஜர் நாட்டில் இருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் இராணுவ கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த சொந்த நாட்டவர்களையும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் பிரான்சு அரசு பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது. முதற்கட்டமாக 262 பேரை வெளியேற்றிய பிரான்ஸ், நைஜரில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டவர்களையும் தனது விமானங்கள் மூலம் வெளியேற்ற உதவி வருகிறது.

இலங்கை

இந்திய ரூபாய்களை வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைக்கு கிடைத்த தண்டனை!

  • August 2, 2023
  • 0 Comments

3 இலட்சத்து 61 500 இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (02.08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாகிஸ்தான் பிரஜையான மொஹமட் தாஹிர் என்ற பிரதிவாதி   நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 02 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி அதனை 7 வருடங்களுக்கு […]

இலங்கை

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

  • August 2, 2023
  • 0 Comments

மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் (இன்று புதன் மாலை ) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கரை ஒதுங்கிய சடலத்தில் நீல நிற சாரம் அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற டி ஷர்ட் அணிந்த நிலையில் காணப்படுகின்றது.இதுவரை சடலம் மீட்கப்படவில்லை. இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் […]

இலங்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மக்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்து!

  • August 2, 2023
  • 0 Comments

புவி வெப்பமடைதலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மக்கள் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதீத வெப்பநிலை காரணமாகவும், காலநிலை சமநிலையற்ற தன்மை காரணமாகவும், மக்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன்தாக்கம்  அமெரிக்கா முழுவதும் மிகவும் அப்பட்டமாக உணரப்படுகின்றன. அமெரிக்கர்கள் முன்னெப்போதும் இல்லாத காலநிலை மாற்றத்தை அனுபவித்துள்ளனர். CNN வெளியிட்ட அறிக்கையின்படி, கொலராடோ நதிப் படுகை 2000 மற்றும் 2021 க்கு இடையில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக 10 டிரில்லியன் கேலன் தண்ணீரை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுத. இதனால்  […]

ஐரோப்பா

கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய பெண்மணிக்கு நேர்ந்த கதி!

மலேசியாவின் பினாங் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அஞ்சப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ் என்ற சொகுசு கப்பலில், இந்திய தம்பதிகளான 70 வயதான ஜகேஷ் சஹானியும், அவரது மனைவி 64 வயது ரீட்டா சஹானியும் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பினாங்கில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் வழியில், தனது மனைவியை அறையில் இருந்து காணவில்லை என கணவர் ஜகேஷ் கப்பல் அதிகாரிகளிடம் […]

இந்தியா

குடி போதையில் மரத்தின் மீது காரை பார்க் செய்த பெண் – 8 வாகனங்கள் சேதம்!

  • August 2, 2023
  • 0 Comments

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வி.ஐ.பி. சாலையில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறியபடி கார் நின்றது. அந்த காரை ஒரு பெண் ஓட்டியதாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில் 8 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு […]

உலகம்

கருங்கடலில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள்! துருக்கி இராணுவம் அதிரடி

கருங்கடலில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்து துருக்கி இராணுவம் அழித்துள்ளது. துருக்கியில் கருங்கடல் பகுதியில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன. கடந்த 29ம் திகதி இஸ்தான்புல் அருகிலுள்ள சைல் நகர் கடற்கரையில் 28 பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இராணுவ வல்லுநர்கள், அவற்றை நீரிலேயே வெடிக்கச் செய்து அழித்தனர். வெடிக்க வைக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் பழமையானவை என இன்ஸ்தான்புல் கவர்னர் தெரிவித்துள்ளார்.. பீரங்கி குண்டுகள் எவ்வாறு கடல் பகுதிக்கு வந்தது […]