மட்டக்களப்பில் தனியாருக்கு சொந்தமான பஸ்வண்டியில் மோதி சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதானவீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் (16) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். தாய், யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போது, தாயை எதிர்பார்த்து பஸ்தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன் , தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு […]













