இலங்கையில் 400 வாகனங்களின் உண்மையான உரிமையாளர்களின் பெயர் மோசடியான முறையில் மாற்றப்பட்டுள்ளது
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன இலக்கதாரர்களின் உண்மையான பெயர்கள் தரவு அமைப்பில் இருந்து மோசடியான முறையில் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு நபர்களின் பெயர்கள் உள்ளிடப்பட்ட பெரிய அளவிலான மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான ரூபா பணத்தை சம்பாதித்த காப்பக ஊழியர் ஒருவரை நாஹஹேன்பிட்ட பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவினர் இன்று (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரொன்றும் […]













