மியான்மரில் படகு விபத்து: 17 ரோஹிங்கியா அகதிகள் பலி
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மலேசியா மற்றும் இந்தோனேசியாவை அடைவதற்கு ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர். மலேசியா நோக்கிச் சென்ற படகில் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. […]













