Eris கொவிட் அச்சம் – சிங்கப்பூர் எடுக்கவுள்ள நடவடிக்கை
சிங்கப்பூரில் Eris கொவிட் தொற்று பரவலின் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவைப்பட்டால் புதுப்பிக்கப்பிட்ட COVID-19 தடுப்புமருந்துகள் இருப்பதை உறுதிசெய்யும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அமெரிக்காவில் Eris என்று அழைக்கப்படும் EG.5 ரகக் கொவிட் பரவுகிறது. புதிதாகப் பதிவாகும் COVID-19 சம்பவங்களில் சுமார் 17 விழுக்காட்டுக்கு அந்தக் கிருமிதான் காரணம். அமெரிக்காவில் அடுத்த மாதம் புதிய Booster தடுப்புமருந்து வெளியிடப்படும். அது XBB.1.5 எனும் ஓமிக்ரோன் வகை கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும். XBB.1.5 வைரஸ் ஓரளவுக்கு EG.5 […]













