இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர்!

  • September 4, 2023
  • 0 Comments

திருகோணமலை -மொரவெவ, நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காத்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மொரவெவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை இன்று (04) அதிகாலை காட்டு யானை தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. நியாஸ் ( 42) என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் […]

ஆஸ்திரேலியா

அண்டார்டிகாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா

  • September 4, 2023
  • 0 Comments

உறைபனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் தங்கியிருந்து பணியாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகும். இந்நிலையில் அண்டார்டிகாவின் தொலைதூர பகுதியில் உள்ள கேசி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பனிக்கட்டிகளை உடைத்து முன்னேறி செல்லும் கப்பலில் மருத்துவ மீட்புக் […]

வட அமெரிக்கா

பல்பொருள் அங்காடிகளில் அதிகரிக்கும் திருட்டு! அமெரிக்க நிறுவனங்கள் கவலை

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் டூத்பேஸ்ட், சாக்லேட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் திருடுவது அதிகரித்து வருவதாக, வால்மார்ட், டார்கெட் உள்ளிட்ட முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. சில வாடிக்கையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோல சிவிஎஸ் மற்றும் வால்கிரீன்ஸ் உள்ளிட்ட சங்கிலிதொடர் மருந்து விற்பனை நிறுவனங்கள், வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹோம் டெப்போ மற்றும் காலணி விற்பனையாளரான புட் லாக்கர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சில்லறை […]

இலங்கை

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு!

  • September 4, 2023
  • 0 Comments

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட  லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 3835 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1535 ரூபாவாகும்.

உலகம்

காபோனில் ஆட்சி கவிழ்ப்பு! இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று போர்க்கொடி தூக்கிய ராணுவம் திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்ததுடன், அதிகாரத்தை கைப்பற்றியது. அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி […]

இலங்கை

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5000 வைத்தியர்கள்!

  • September 4, 2023
  • 0 Comments

சுமார் 5,000 வைத்தியர்கள் தகுதிபெற்று வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 1,500 மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில்  அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை இன்று (09.04) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியர்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் கூட பிரச்சினைகள் எழலாம் என வைத்தியர் அளுத்கே தெரிவித்தார்.

வட அமெரிக்கா

கனடா- ஒட்டாவாவில் திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

  • September 4, 2023
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவா நகரில் திருமண நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் இரண்டு டொரன்டோ பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவாவின் கன்வென்ஷன் சென்டர் என்னும் பகுதிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 26 வயதான முகமட் அலி மற்றும் 29 வயதான சாத்தூர் ஆதி தாஹிர் […]

இலங்கை

வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. www.doenets.lk, www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை சுட்டிலக்கத்திணை மாத்திரம் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, இம்முறை தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தேர்வில் 278,196 பள்ளி விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் […]

இலங்கை

எதிர்கட்சி தலைவர் சஜித்தின் உயிருக்கு ஆபத்து!

  • September 4, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என்பதற்காக, சிலக் குழுக்கள் தன்னுடையஉயிருக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிரிந்தி ஓயாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிடிவாதம் பிடிப்பவர்கள் தம்மை கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருக்கலாம். “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் போட்டி வேட்பாளராக நான் […]

பொழுதுபோக்கு

தனுஷின் புதிய ஜோடி யார் தெரியுமா? சுடச் சுட வெளியான தகவல்

  • September 4, 2023
  • 0 Comments

தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் லேட்டஸ்டாக தனுஷிற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகவுள்ளது. அடுத்து அவரது நடிப்பில் இந்தி படம் ஒன்றும் வெளியாகவுள்ளது. தற்போது தனுஷ் தனது 50வது படத்தில் பிசியாக உள்ளார். வடசென்னையை வைத்து கேங்ஸ்டர் கதைகளத்தில் படம் தயாராகிறது. சன் பிக்சர்ஸ் […]