இலங்கை

தமிழர்பகுதியில் பாடல் போட்டி என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் பண மோசடி!

இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று முகநூல் ஒன்றின் ஊடாக பாடல் போட்டி தெரிவை நடாத்தி இன்றைய தினம் இறுதி போட்டி என்று அழைத்து பல லட்சம் ரூபா வசூல் செய்து போட்டியாளர்களை ஏமாற்றியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இருந்து மாத்திரம் இல்லாமல் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக வவுனியா,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,கண்டி,நுவரேலியா,கொழும்பு,மாத்தளை என இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து குறித்த […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் 7ல் ஓவியா பங்கேற்கிறாரா?

பிக் பாஸ் தமிழ் 7வது சீசன் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது, சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில், இந்த சீசனில் ஒன்றல்ல இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் வழக்கம் போல் 18 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது, அப்போது பார்வையாளர்கள் இரண்டு வீடுகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். தற்போது கிடைத்த தகவலின்படி, ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்கள் இருப்பார்கள், […]

அறிந்திருக்க வேண்டியவை

பச்சையாக உண்ணக் கூடாத காய்கறிகள்!

  • August 27, 2023
  • 0 Comments

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உணவு பெரும் பகுதி பங்கை வகிக்கிறது என்பதை நாம் அறிவோம். உணவைப் பொறுத்தவரை காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் பிரதான பகுதியாக இருக்க வேண்டும். எல்லா காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட முடியாது. அந்த வகையில் பச்சையாக சாப்பிட கூடாத காய்கறிகள் சிலவற்றைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். சேப்பங்கிழங்கு இலைகள் இதனை வேக வைத்துதான் உண்ண வேண்டும். ஏன் என்றால் இந்த இலைகளில் இருக்கக்கூடிய அதிக அளவு ஆக்சலேட் நமது […]

இந்தியா

போலீசாருக்கு நேர்ந்த கொடுமை! அதிகரிக்கும் தற்கொலைகள் – வைரலாகும் வீடியோ

UP போலீஸ் கான்ஸ்டபிள் ஓம்வீர் சிங், போலீசாருக்கு நேர்ந்த கொடுமையை உணர்ச்சிகரமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத் காவல் துறையைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிப்பதைக் காணலாம். காவலர்களின் உயிர்களைப் பற்றி திணைக்களம் குறைந்த அக்கறை கொண்டதாக கான்ஸ்டபிள் காணொளியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் “காவல்துறையினர் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை எடுத்துரைப்பதே இந்த வீடியோவின் நோக்கம். UP […]

இந்தியா

முஸ்லீம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் – மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

  • August 27, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

இலங்கை

முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் – பேராயர் கர்தினால்!

  • August 27, 2023
  • 0 Comments

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை பெற வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ராகம பகுதியில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “எங்கள் நாட்டின் துண்டுகளை வெவ்வேறு நாடுகளுக்கும் படைகளுக்கும் விற்று, இந்த நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்ல பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் […]

பொழுதுபோக்கு

“வாய்ப்பு வேண்டும் என்றால், படுக்கைக்கு வர வேண்டும்” இளம் நடிகை

  • August 27, 2023
  • 0 Comments

இளம் நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அந்த நடிகையை பலரும் அழைத்து இருக்கின்றனர். அமெரிக்காவில் பிறந்த நடிகை அனு இம்மானுவேல், இந்தியாவில் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி, அதன் பின் நிவின் பாலி கதாநாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவின் […]

ஐரோப்பா

பிரிட்டனில் துஸ்பிரயோக குற்றவாளிகளுடன் சிறை வைக்கப்படும் புலம்பெயர் சிறுவர்கள்!

  • August 27, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சிறு படகுகளில் ஆதரவில்லாமல் புலம்பெயரும் அப்பாவி சிறார்கள் பலர் கொடூர துஸ்பிரயோக குற்றவாளிகளுடன் சிறை வைக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் ஆதரவில்லாமல் தனியாக புலம்பெயரும் சிறார்களே இவ்வாறான சிக்கலை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. இதில் கடத்தப்பட்டுவரும் சிறார்களே அதிகம் எனவும், இவர்களை HMP எல்ம்லி, கென்ட் ஆகிய பகுதிகளிலும் வெளிநாட்டவர்களான கைதிகளுடனும் சிறை வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக சமீபத்தில் எல்ம்லியில் முன்னெடுத்த சோதனையில் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர்களும் அங்கே அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை அப்படியான 14 […]

ஐரோப்பா

நேட்டோவுக்கு எதிராக ஜேர்மனியில் மக்கள் போராட்டம்..!

  • August 27, 2023
  • 0 Comments

ரஷ்ய- உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக கூறி அதன் உறுப்பு நாடான ஜேர்மனியில் மக்கள் போராட்ட்ம் நடத்தினர். சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நடத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். போர் வேண்டாம் அமைதியே வேண்டும், ஆயுதங்கள் அமைதியை தராது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் பேரணி சென்றனர். லிபியா,ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நேட்டோ போர் நடத்தியதாக போராட்டக்கார்ர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு […]

இலங்கை

கொழும்பில் வீடு ஒன்றின் மாத வாடகை 1000 ரூபாய் : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்!

  • August 27, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெதிவெல பாராளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடொன்றின் மாதாந்த வாடகை 1000 ரூபா என தெரியவந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வாடகைக் கட்டணத்தில் திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிக்கை காட்டுகிறது. 1993 மே 28ம் திகதியில் இருந்து வீட்டு வாடகை வசூலிக்கப்பட்டதும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும்  அந்த குடியிருப்புகளில் நீர்,  மின்சாரம் மற்றும் […]

error: Content is protected !!