காதலை நிராகரித்ததால் 23 வயது பெண்ணின் கழுத்தை நெரித்துக்கொன்ற 17 வயது சிறுவன்!
தருமபுரி நகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர், இவரது 23 வயதான மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர், ஹர்ஷா கடைசியாக ஒரு 17 வயது சிறுவனுடன் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. […]













