1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ரன்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். […]













