புதிய வரி வசூலிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனை!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி வசூலிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய இது தொடர்பில்நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் வரி வசூலிப்பு சட்டத்தில் ஒரு எழுத்தும் மாற்றப்பட மாட்டாது […]













