இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது – தயாசிறி ஜயசேகர!
இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர். இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்தின் 30ஆவது பிரிவின் (பி) உறுப்புரையில் மின்பாவனையாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தாங்கிக் […]













