இலங்கை செய்தி

போலி ஆவணங்களை தயாரித்து காணியை விற்பனை செய்த நபருக்கு கடூழிய சிறை!

  • April 12, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களை தயாரித்து காணியொன்றை விற்பனை செய்த நபருக்கு 27 கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ரஞ்சன் லியனகே என்ற நபர் போலி ஆவணங்களை தயார் செய்து 47 அரை இலட்சம் ரூபாவுக்க காணியை விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து சிறைத் தண்டனையுடன் அபராதத்தையும் அறிவித்த நீதிபதி,  அபராதத் தொகையை செலுத்தாவிடின் மேலதிகமாக 6 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் […]

இலங்கை செய்தி

சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை : பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்!

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கிறது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை தென்னாபிரிக்க பாணியை பின்பற்ற முயல்கின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை விமர்சித்துள்ளது. தென்னாபிரிக்க பாணியை இலங்கை பின்பற்றினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் […]

இந்தியா செய்தி

யாழ் கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவலிங்கம் காணப்படும் இடத்தியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் […]

இலங்கை செய்தி

மனித உரிமைகளை வலுப்படுத்தக்கூடிய வகையில் பொருளாதார நெருக்கடியைக் கையாள வேண்டும்

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச சட்டங்களின்படி பொருளாதார நெருக்கடியைக் கையாளும்போது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அதனை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கும் நிதியியல் கட்டமைப்புக்களுக்கும் இருக்கின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கிலான கொள்கைகள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதிக்காமல் இருப்பதையும், ஊழலுக்கு எதிரான மறுசீரமைப்புக்கள் மூலமான பொறுப்புக்கூறலையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 3 […]

இலங்கை செய்தி

கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, நாடளாவிய ரீதியில் நிதியியல் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கிறிப்டோ நாணயங்கள் இலங்கையில் சட்டபூர்வமான நாணயம் அல்ல என்பதுடன், நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தலும் பாதுகாப்புச்செயன்முறைகளும் நடைமுறையில் இல்லை. எனவே இணையத்தளம் மற்றும் ஏனைய வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படும் கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிப்டோ என அழைக்கப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகளைக் கருத்திற்கொண்டு, அதுபற்றி விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே […]

இலங்கை செய்தி

இலங்கையில் சோம்பேறிகளாக மாறிய மக்கள் – காரணத்தை வெளியிட்ட நிபுணர்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வசிக்கும் ஒவ்வொரு 3 பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றா சுகாதார பணியக சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஷெரின் பாலசிங்கம் இதனை தெரிவித்துள்ளார். இதனால், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி

  • April 12, 2023
  • 0 Comments

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன  ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் […]

இலங்கை செய்தி

யாழில் சுற்றிவளைக்கப்பட்ட சொகுசு கார் – பொலிஸார் அதிர்ச்சி

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு கார் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோ கிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி – சிக்கிய பெண்கள்

  • April 12, 2023
  • 0 Comments

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று முன்தின் மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸை, கடுகுருதுவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது விடுதியின் முகாமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் விதாரன்தெனியே பிரதேசங்களைச் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – 12 வயது மாணவிக்கு ஆசிரியர் செய்த செயல்

  • April 12, 2023
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை – மயூரபுர பிரதேசத்தில் 12 வயது மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 28ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது தந்தை இது குறித்து விசாரித்துள்ளார். அதன்போது, ​​குறித்த மாணவி பல்லகஸ்வெவ சந்தியில் […]