ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் அழிந்து வரும் 07 அரிய உயிரினங்கள் கண்டுப்பிடிப்பு!

ஸ்காட்லாந்திற்கான தேசிய அறக்கட்டளை (NTS),  07 அரிய உயிரினங்களை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது அரசாங்கம் முன்னெடுத்த பாதுகாப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இந்த கண்டுப்பிடிப்புகளில் ட்ரெஷ்னிஷ் தீவுகளில் (Treshnish Isles) அழிந்து வரும் கார்ன்கிரேக் (corncrake) குஞ்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உயிரினங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மீட்கப்பட்டு இனப்பெருக்கம் செய்ய தேவையான சூழ்நிலைகள் உள்ள பாதுகாப்பான இடங்களில் பராமரிக்கப்பட்டன.

இவை தவிர அரிய ரோவ் வண்டு,  அந்துப்பூச்சி மற்றும்  பல்வேறு பட்டாம்பூச்சி-ஆர்க்கிட்கள் (butterfly-orchids)ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள NTS இயற்கை பாதுகாப்புத் தலைவரான ஜெஃப் வாடெல் (Jeff Waddell), இந்த கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பிலிருந்து இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்