செய்தி தமிழ்நாடு

தந்தை சடலத்திற்கு முன்பு திருமணம் செய்த மகன்

கள்ளக்குறிச்சி அருகே தந்தை உயிரிழந்த நிலையில் கண்ணீர் கொட்டி கட்டியணைத்து கதறி அழ  முடியாமல் தந்தையின் ஆசைக்காக காதலித்த பெண்ணை இறந்த தந்தையின் காலில் பாத பூஜை செய்து காதல் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மகன் திருமணத்திற்கு உறவினர்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்துவிட்டு  உடல் நலக்குறைவான் உயிரிழந்த சோகத்திற்கு வந்த உறவினர்கள் கதறி அழ முடியாமலும், திருமணத்தைக் கண்டு ரசிக்க முடியாமலும் தவித்த சம்பவம் சோகத்தின் உச்சத்தை தொட்டது..

இதுகுறித்து ஒரு சிறு செய்தி தொகுப்பு..

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்,  இவர் மனைவி அய்யம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவர் .மேலும் ராஜேந்திரன் என்பவர் வி ஆர் ஏ தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குனராகவும் தொண்டாற்றி வருகிறார்.

இதனிடையே இவர்களுக்கு  ஆசை ஆசையாக பெற்றெடுத்த மகன்  பிரவீன் B.com பட்டம் படித்துவிட்டு மகனுக்கு அவர் காதலிக்கும் பெண்ணான சொர்ணமால்யா என்ற பெண்ணை தனது மூச்சு இருக்கும் பொழுது திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என எதிர்பார்த்து இருந்தார்.

இதனிடையே ராஜேந்திரன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்பு நாள்தோறும் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றும்  வந்துள்ளார்.

இந்த நிலையில் வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சி ஏ கே டி பள்ளி எதிரே உள்ள குறிஞ்சி மகாலில் திருமணம் செய்ய பத்திரிக்கை அடித்து உற்றார் உறவினர் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு அதிக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் அவரது உடலை சொந்த வீட்டிற்கு கொண்டு வந்து ஊற்றார் உறவினர்கள்  முன்னிலையில் மகனுக்கு ஆசையாக திருமணம் செய்ய வேண்டும் என்ற நினைத்த ராஜேந்திரனுக்கு நாம் என்ன சொல்லப் போகிறோம் என பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது கண்ணீர் விட்டு கதறி அழ முடியாத அவரது மகன் என்னுடைய அப்பாவின் ஆசை ஏற்றார் போல் அவர் பிணத்தை எடுப்பதற்குள்ளாகவே அவருக்கு பாத பூஜை செய்து திருமணம் செய்து கொள்கிறேன் அதற்கு பின்பு இறந்த சடங்கு செய்வதற்கு கொள்ளலாம் எனவும்,

காதலித்த பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் உருக்கமாக பேசிய இளைஞர்  தன்னுடைய தந்தையின் ஆசை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவர் இல்லாத இந்த சூழ்நிலையில் அவருடைய ஆசை ஏற்றார் போல் அவர் காலடியிலேயே என்னுடைய திருமணம் நடக்க வேண்டும்

என எதிர்பார்க்கிறேன் என ஆசை மகன் பிரவீன் கண்ணீர் மல்க உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்த நிலையில்  எந்தவிதமான  தடங்கள் இல்லாமல்

உடனடியாக தாலியை தயார் செய்து தந்தையின் உடலை தூக்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக இறந்து போன தந்தைக்கு பாத பூஜை செய்து விட்டு தந்தையின் காலடியில்  காதலியுடன் மாலை மாற்றி கொண்டு விழுந்து தான் காதலித்த மனப்பெண்ணை தாலி கட்டி கிராம பொதுமக்கள் மற்றும் உறவினர் மத்தியில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வின் போது திடீரென கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழையில் உயிரிழந்த தந்தை,  மற்றும் தாயின் மனம் உருக்குலைந்த நிலையில் கணவர் இறந்து விட்டாரே என்ற  எண்ணத்தில் வாடி நின்ற தாய்  மற்றும் திருமணத்திற்கு வர வேண்டும்

என அழைத்துச் சென்ற ராஜேந்திரன் இறந்து போன பின்பு அவர் இறந்த நிலையிலும் அவரது மகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வில் கட்டி அணைத்து கதறி அழுவதா ? திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதிகளை ஆசீர்வாதம் செய்து

ஆசீர் வைப்பதா என தெரியாமல் விழி பிதுங்கி கலங்கி நின்ற சம்பவம் கிராம பொதுமக்களிடத்திலே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் தன் காதலித்த காதலனுக்கு ஏற்பட்டுள்ள துயர நிகழ்வின் போது காதலன் சிறிதும் மனம் வாடாமல் அவரது கரம் பிடிப்பதே மட்டுமே மகிழ்ச்சி,  அதே சமயம் காதலனின் தந்தை உயிரிழந்து விட்டாரே என்று கண்ணீர் கலங்க முடியாமல்

தன் காதலனின் தந்தை ஆசைக்கு ஏற்றார் போல் எந்தவித முக சுழிவும் இல்லாமல் சிங்க பெண்ணாக தாலி கட்டிக் கொண்ட மணமகளை எல்லோரும் வியந்து பார்த்தனர். மேலும்  திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிராகும்

அந்தப் பெயரை விளைவிக்கும் தம்பதிகளின் கண்ணீர்கள் மத்தியில் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கடவுள்தான் அருளும் ஆசியும் வழங்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு..

மேலும் கெட்டது நடந்த இடத்தில் நல்லது நடந்தால் குடும்பம் செழிக்கும் என முன்னோர்கள் சொல்வது போல் வான் மழை தூவ பெரியோர்கள் அர்ச்சதை தெளிக்க, தந்தையின் மரண நிகழ்விலும், மகன் மாங்கல்யம்

திருமண நிகழ்வு  ஊரார் மத்தியில் மன மகிழ்வோடு நடைபெற்ற  சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பணியை தன் காதலித்த மனைவியுடன் இணைந்து காதலன் மேற்கொண்டான் ஊரே வரவேற்கும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content