அரபு நாட்டில் அனோஜனுக்கு மன்னிப்பு: பௌத்த நாட்டில் ஞானசார தேரர் உள்ளே – நாமல் கொதிப்பு
“பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
“சவூதி அரேபியா அரபு நாடாக இருந்தபோதிலும், அனோஜன் சிவராசாவுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இலங்கையானது பௌத்த நாடாகும். அனோஜன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டே ஞானசார தேரருக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இஸ்லாம் மதத்தை அவமதித்த இளைஞர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூியிடம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்க முடியுமென்றால், தனது நாட்டில் உள்ள ஞானசார தேரருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாது எனக் கூற முடியாது.
மன்னிப்பு வழங்கப்படாவிட்டால், அது அரசியல் காரணமாகவே இருக்கும். வேறு காரணமாக இருக்காது” என்றார் நாமல் ராஜபக்ச.




