இலங்கை செய்தி

யாழில் சுற்றிவளைக்கப்பட்ட சொகுசு கார் – பொலிஸார் அதிர்ச்சி

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு கார் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோ கிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

 

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content