இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்!

பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை நிறைவேற்றும் வகையிலேயே பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தொடர்பான நற்சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 50வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் நாடு திரும்பும் வரைஇ இன்று முதல் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதிஇ பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
See also  இந்திய - இலங்கை இணைப்பு திட்டங்கள் தொடர்பில் அநுர அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content