சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்த ஜெலென்ஸ்கி!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணியளவில் டச்சு செனட் கட்டிடத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகவும், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“உக்ரைனுக்கு நீதி இல்லாமல் அமைதி இல்லை” என்ற தலைப்பில் இதன்போது ஜெலென்ஸ்கி உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, அவரது வருகை பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அரசாங்க செய்தித் தொடர்பாளர்கள் மறுத்துவிட்டனர்.
உக்ரைனில் இருந்து குழந்தைகளை நாடு கடத்தியதாக விளாடிமிர் புடின் மீது ஐசிசி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.