ஆஸ்திரேலியா

சிட்னியில் பாரிய தீவிபத்து : மற்ற கட்டிடங்களுக்கும் தீ பரவியதால் சேதம்!

சிட்னியின் சிபிடியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலதளங்களை கொண்ட கட்டிடமொன்று தீப்பிடித்ததை தொடர்ந்து குறித்த தீ மற்ற கட்டிடங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் பெரும்புகைமண்டலத்தை காணமுடிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்டிரல் ஸ்டேசனிற்கு பின்னால் உள்ள கட்டிடமொன்று முற்றாக எரியுண்டுள்ளது.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்காக பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

100க்கும் மேற்பட்ட தீயணைப்புபடைவீரர்களும் 20க்கும்மேற்பட்ட தீயணைப்பு படைவாகனங்களும் தீயை கட்டுப்படுத்த முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருகட்டிடம் தீயினால் முற்றாக சேதமடைந்து விழப்போகின்றது ஏனைய கட்டிடங்களுக்கும் தீ பரவத்தொடங்கியுள்ளது பொதுமக்கள் வசிக்கும் தொடர்மாடிகளும் ஆபத்தில் சிக்கியுள்ள என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித