செய்தி தமிழ்நாடு

குட்டையன்பட்டி கிராமத்தில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குட்டையன்பட்டி கிராம கண்மாயில்

ஆண்டுக்கு ஒருமுறை கோடை காலத்தின் துவக்கத்தில் நடத்தப்படும்  பிரம்மாண்டமான மீன் பிடி திருவிழா இன்று நடைபெற்றது.

வழக்கம் போல் சுற்று வட்டாரத்தில் உள்ள  25 ற்கும் மேற்பட்டகிராம மக்கள் கலந்து கொண்டு கச்சா, ஊத்தா ஆகிய உபகரணங்களை கொண்டு ஏராளமான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.

இந்த மீன்பிடித் திருவிழாவில் கட்லா, ரோகு,மிருகால், சிசி கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பெருமளவில் கிடைத்தன. இதனால் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்பிடிக்கும் காட்சியை சுற்றுப்புற கிராம மக்கள்  ஏராளமானோர் கூடி நின்று கண்டு ரசித்தனர்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி