இலங்கை செய்தி

கிளிநொச்சியில் மனைவியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில்  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபருக்கும்  மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை