இலங்கை செய்தி

இலங்கையில் மேலதிக சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள்!

இலங்கையில் பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் பொது மக்களின் நலன்கருதி மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை