இலங்கை செய்தி

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டுள்ள தகவல்!

லங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “ இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என நான் மீண்டும் மீண்டும் கூறியுள்ளேன்.

சோஃபா (SOFA) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மீள மதிப்பீடு செய்யவோ தமது நாட்டுக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த ஒப்பந்தம் முதன்முதலில் 1995ல் கையொப்பமிடப்பட்டது.முன்னதாக, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்புக் குழு இந்த ஆண்டு பெப்ரவரியில் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இலங்கைக்கு வந்திருந்தது.

பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு விடயங்கள் தொடர்பாக முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு வருகைத் தந்திருந்தது.

உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த தூதுக்குழு, அமெரிக்க விமானப்படையின் இரண்டு விசேட விமானங்களில் நாட்டை வந்தடைந்தது. இந்த விஜயம் இலங்கையில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற ஊகத்தை தூண்டியது.மேலும் குறித்த விஜயம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை