நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் – 12 பிரித்தானியர்கள் மாயம்
நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான எல்லையோர கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போயுள்ள 384 சுற்றுலாப் பயணிகளில் 12 பிரித்தானியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டுப் பயணிகளில் 291 பேர் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று நேபாள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல் நீர்மின் நிலையத்தில் பணிபுரிந்த 08 தொழிலாளர்களும் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் வெளியானது




