உலகம்

ஈரானில் ஆயுதப்படைகளின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் புகுந்த கார் – நால்வர் பலி

ஈரான் அரசாங்கம் மற்றும் ஆயுதப் படைகளின் ஆதரவாளர்கள் கூடியிருந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில் குறைந்தது 04 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தில், நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் போக்குவரத்துச் சிக்னல்களில் மோதிய பிறகு கூட்டத்திற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது அவர் இயல்பான நிலையில் இல்லை என்று  மூசா-அபாடி தெரிவித்துள்ளார்.

இதில் அரசியல் நோக்கம் இருந்ததற்கான உடனடி அறிகுறி எதுவும் இல்லை, மேலும் அதிகாரிகள் இந்தச் சம்பவத்தை ஒரு சாலை விபத்து என்று விவரித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்