செய்தி விளையாட்டு

Women’s T20 WC – பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

9வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது.

தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது.

அதிகபட்சமாக நிடா தார் 28 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டும் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சபாலி வர்மா 32 ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் அடித்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா சனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content