ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வளர்ப்பு நாயால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் பெண் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

43 வயதுடைய அப்பெண், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் குறித்த 43 வயதுப் பெண் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் இரு நாய்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அவருடன் கணவரும் உடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், இரு நாய்களில் ஒன்று தீடீரென அப்பெண் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது. முகத்தில், கால்களில், கைகளில் என பல இடங்களில் காயமேற்பட்டது.

உடனடியாக பொலிஸார் அழைக்கப்பட்டு, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அப்பெண் காப்பாற்றப்பட்டார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உயிருக்காபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி