இலங்கை

இலங்கையில் திருமணத்திற்கு தயாரான பெண் விபத்தில் மரணம் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பிட்டிகல மானமிபிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் நின்றிருந்த பெண்ணொருவர், சிறியரக லொறி மோதி உயிரிழந்தார்.

எனினும் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது பிடிகல பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.

பிட்டிகல தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி என்ற 32 வயதான பெண்ணே, கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நபரை நேற்றிரவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயரில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள நான்கு ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் இருந்ததாகவும், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே சந்தேக நபர் தன் வருங்கால மனைவியியைத் திட்டமிட்டு கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மறுநாள் மாபலகம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பெண்ணை லொறியால் மோதி கொலை செய்த குறித்த வாகன சாரதி தப்பியோடி தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் நேற்று எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content