இலங்கை

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது இனவாதத்தை விதைப்பார்கள் – பிரசன்ன ரணதுங்க

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும்,  அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இன்று (2) ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் மூக்கை நுழைத்தாலும் பொருட்படுத்தாது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி மக்களை அடைத்து வைக்கும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிராம மட்டத்தில் நிற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பொலவில் உள்ள தனது வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் இதற்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்