ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்!
தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜய் உள்ளிட்ட குழுவினர், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்தித்தனர்.
இதன்போது தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதலில் விஜய்யை வரவேற்ற ஆளுநர் அர்லேகர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
பதவியேற்பு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி நாளை முற்பகல் 11.30 மணி அளவில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முதல்வராக விஜய் நாளை பதவியேற்பார் என தெரியவருகின்றது. தமிழக அமைச்சரவையும் நாளை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சரவையில் செங்கோட்டையன், ஜேசிடி. பிரபாகர், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார், மரிய வில்சன், ராஜ்மோகன், அருண்ராஜ், சத்தியபாமா, விஜயலட்சுமி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற பெரும்பான்மையை விஜய் தரப்பு அதிகாரப்பூர்வமற்ற ரீதியில் உறுதிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.




